நண்பர்களிடையே மனைவிகளை மாற்றி உல்லாசம் : அம்பலப்படுத்திய கேரள பெண் படுகொலை
இந்தியாவில் தனது மனைவிகளை வேறு நபர்களுடன் மாற்றி உறவு கொள்ளும் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் புகார் அளித்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷினோ மேத்யூவுக்கு பாலகாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில், ஷினோவின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
பெண்ணின் கணவருக்கு சில பணக்கார நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இணைந்து ஜோடி ஷேரிங், கப்பிள் மீட் அப் போன்ற சில குழுக்களை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி, தங்கள் மனைவிகளை பரஸ்பரம் பகிரந்து செக்ஸ் உறவு கொள்ளும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஒரு நாள் பெண்ணின் கணவர், தனது மனைவியிடம் தனக்கு தெரிந்த நபர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவ்வாறு செய்யவில்லை என்றால் குழந்தைகளை கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், இது குறித்து பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
குறித்த பெண் வழங்கிய புகாரின் அடிப்படையில் கணவரை பிடித்து அவரின் செல்போன்களை சோதித்து பார்த்ததில் இதுபோன்ற செயல்களில் நூற்றுக்கணக்கனா நபர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும், கணவர் மேத்யூவுடன் குழுவில் இருந்த 6 பேரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண் கணவனை பிரிந்து தந்தை மற்றும் சகோதரர் துணையுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண் கடந்த மே 19ஆம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் பெண்ணின் தந்தையும், சகோதரரும் வேலைக்கு சென்ற நிலையில், அந்த நேரத்தில் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து பெண்ணின் தந்தையும், சகோதரரும் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். பெண்ணின் கணவர் தான் பழிவைத்து இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்