நண்பருடன் மதுகுடிக்க சென்ற ராணுவ வீரர்: சடலமாக மீட்பு

இந்தியாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஏரிவாய் கிராமத்தைச் சேர்ந்த கனகசபாபதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 40 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் நண்பருடன் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பியபோது, ஊத்துக்காடு மதுபானசாலையில் மது குடிக்க சென்றதாகவும், அங்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் நடந்த மோதலில் கத்தியால் குத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்