நண்பனை தலைக்கவசத்தால் தாக்கிக் கொலைசெய்தவர் கைது
மினுவாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பனை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரம்பெல்ல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மது அருந்தியபோது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அஸ்வென்ன வத்த பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்