நட்டஈடு பெற்றுக்கொள்ள புதிய திட்டம்

விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அந்தப் பண்ணைகளுக்கு காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் நிலைமைகளை முகாமைத்துவம் செய்யும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

ஒரு ஏக்கர் விதை நெல் செய்கைக்காக 13,600 ரூபாய் காப்புறுதி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செலுத்தும் பட்சத்தில், பயிர்ச் சேதம் ஏற்படும்போது ஒரு ஏக்கருக்கு ஒரு 180,000 ரூபாய் நட்ட ஈட்டுத் தொகையை விவசாயிகளால் பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்படி, வெள்ளம், வரட்சி, கட்டுப்பாடற்ற நோய்கள், பீடை மற்றும் பூச்சித் தாக்கங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இயற்கை அனர்த்தங்கள் மட்டுமன்றி, காட்டு யானைகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களையும் இந்தக் காப்புறுதித் திட்டத்தில் உள்ளடக்குவதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.