
நட்சத்திர ஹோட்டல் போல் பல கோடி மதிப்புள்ள ஆச்சிரமங்கள் : நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த சாமியாரின் பின்னணி அம்பலம்!
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் சில நாட்களிற்கு முன்னர் சனநெரிசலில் பெருமளவு மக்கள் உயிரிழப்பதற்கு காரணமானவர் என குற்றச்சாட்டப்பட்டும் “போலே பாபா” என்ற சாமியாருக்கு சொகுசு ஆசிரமமும் பல கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விஸ்வ ஹரி நாராயண் எனப்படும் போலே பாபா என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸார் தெரிவிக்கையில்,
போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது, தற்போது அவர் நிறைய சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது, அதற்கான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம்.
13 ஏக்கரில் அவர் 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமத்தை கட்டியுள்ளார், அந்த ஆசிரமம் அமைந்துள்ள இடம் மட்டும் ரூ.4 கோடி மதிப்புள்ளது.
ஆசிரமத்தில் பல அறைகள் உள்ளன, விலை உயர்ந்த பொருட்கள் மூலம் அறைகள் அழகுப்படுத்தப்பட்டுள்ளன, அறைகளில் எல்லாவசதிகளும் உள்ளன.
போலே பாபாவின் உண்மையான பெயர் சூரஜ் பால், இதற்கு முன் காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றியுள்ளார்.
அவரது ஆசிரமத்தில் 12 அறைகள் உள்ளன, அவற்றில் 6 அறைகளை போலே பாபா பயன்படுத்தி வந்துள்ளார், மற்ற 6 அறைகளில் தன்னார்வலர்கள், கமிட்டி உறுப்பினர்கள், விவிஐபி.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரமத்துக்கு தனி சாலை வசதியும் உள்ளது, அத்துடன் கலை நுணுக்கங்களுடன் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலத்தை தனக்கு பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கினர் என்று போலே பாபா கூறியுள்ளார்.
ஆனால், ஆவணங்களை ஆய்வு செய்த போது அவருக்கு மேலும் பல சொத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது, அவை கோடிக்கான ரூபாய் மதிப்புள்ளவை, என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
போலே பாபா மீது ஆக்ரா, எடாவா, காஸ்கஞ்ச, பரூக்காபாத் மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் பல்வேறு வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
