நடுவீதியில் துரத்தி துரத்தி இளம் பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை
இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலத்தில், இளம்பெண்ணை நாலைந்து மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சியில் உலுக்கி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கொத்வாலி திஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் ஒருவர், தன்னுடைய மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் தனது வீட்டுக்குச் செல்கிறேன் எனக் கூறி விட்டு, அவர் புறப்பட்டுள்ளார்.
வழியில் இளம்பெண் தனியாக நடந்து சென்றதை நோட்டமிட்ட கும்பல், லிப்ட் தருகிறோம் வரியா? எனக் கூறி, நாலைந்து மோட்டார் சைக்கிளில் வழிமறித்து அச்சுறுத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் அவரை கடத்த முயன்றதாகவும் தெரிகிறது. ஆனால் வாய் பேச முடியாததால் கத்தி கூச்சலிட்டு யாரையும் உதவிக்கு அழைக்க முடியாமல் மறுங்கிய இளம்பெண், அவர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் அவர்களின் கையில் சிக்கிய பெண்ணை ஆட்கள் நடமாட்டம் இல்லா வயலுக்குள் இழுத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் மகள் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த குடும்பத்தினர் உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்து தேடியுள்ளனர்.
இந்த தேடுதலின் போது வயலில் மயக்கிய நிலையில் இளம்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளம்பெண் தப்பியோட முயன்ற காட்சிகள், மாவட்ட எஸ்.பி.யின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
உபியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணை பைக்கில் சுற்றி வளைத்து அச்சுறுத்தும் போது அவ்வழியாக பொதுமக்கள் சிலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யாரும் இளைஞர்களைக் கண்டித்து இளம்பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை என தெரியவருகின்றது.