
நடுவீதிக்கு வந்துள்ள பண்ணையாளர்களின் குடும்பங்கள் : சங்கிலி போராட்டத்தில் குதிப்பு
மாதவன மயிலத்தமடு மேச்சல்தரை நிலத்தை மீட்டு தர கோரிய அறவழிப் போராட்டமானது இன்று சனிக்கிழமை 16வது நாளை கடந்துள்ளதுள்ள நிலையில் பண்ணையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை எவ்விதமான உறுதியான பதில்களும் கிடைக்கவில்லை என, தெரிவித்து மட்டக்களப்பு வழைச்சேனை பிரதான வீதியில் இன்று சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றம் காரணமாக கால்நடைகளுடைய மேய்ச்சல்தரை நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது மேய்ச்சல் தரைகளை மீளவும் தங்களிடம் ஒப்படைக்க கோரிய சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு உத்தரவாதங்களை வழங்கி செல்கின்ற போதிலும் இன்றும் கூட மாதவன மயிலத்தமடு பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றமும் கணி துப்புரவு செய்யும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருவதாகவும் மாதவன மயிலத்தம்டு பகுதியில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெளியேறும் வரைக்கும் போராட்டத்தை கைவிட போவதாக இல்லை எனவும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது அறவழிப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காவிட்டால் மட்டக்களப்பிற்கான ஜனாதிபதியின் வருகையின் போது பாரிய எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.






