நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

-மன்னார் நிருபர்-

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26 ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற படகு சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

விபத்தினை தொடர்ந்து இரண்டு மீனவர்கள் நீந்தி வந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவியால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாயமான மீனவர்களை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு சக மீனவர்கள் இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று புதன் கிழமை மாலை இவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து மரைன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நடுக்கடலில் மாயமான மற்றைய மீனவரை தேடித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ள உறவினர்கள் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்