நடிகை தமிதா அபேரத்னவிற்கு விளக்கமறியல்

நாட்டில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த நடிகை தமிதா அபேரத்ன, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த வேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை தமிதா அபேரத்ன இன்று வியாழக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.