நடிகர் ஹேமல் ரணசிங்க கைது
பிரபல நடிகர் ஹேமல் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேவ்லாக் நகரில், கடந்த ஜனவரி 8 ஆம் திகதி, நபர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், வெள்ளவத்தை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்
அவருக்கு எதிராக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அவரை பொலிஸாரிடம் ஆஜராகுமாறு பலமுறை அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வெள்ளவத்தை பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ஹேமல் ரணசிங்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
