“நகைச்சுவை வனவிலங்கு” விருது வென்ற விலங்கு!

நிகான் நகைச்சுவை வனவிலங்கு விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு போட்டியில் 109 நாடுகளிலிருந்து 10,000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இது இப்போட்டியின் கடந்த 10 ஆண்டு கால வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

2015 ஆம் ஆண்டு, பிரித்தானிய வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஒருவரால் இந்த விருது ஆரம்பிக்கப்பட்டது.

இம்முறை நடைபெற்ற விருது வழங்களில் ‘ஹை ஃபைவ்’ எனப்படும் கொரில்லா வெற்றி வாகை சூடியது.

ருவாண்டாவைச் சேர்ந்த கொரில்லா ஒன்றே வெற்றியாளராக தெரிவாகியுள்ளது.

வெற்றி பெற்றுள்ள இந்த புகைப்படம் மார்க் மெத் கோன் என்பவரால் எடுக்கப்பட்டது.

அந்த ஆண் கொரில்லா, வித்தைகளைக் காட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளது.

“அது சுழன்று ஆடுவது, உருண்டு விழுவது மற்றும் கால்களை உயர்த்தி உதைப்பது போன்றவற்றைச் செய்தது.

அதன் செயல்திறனைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது,” என்கிறார் புகைப்படக் கலைஞர் மார்க்.

இதேவேளை இளையவர் பிரிவு, இளம் புகைப்படக் கலைஞர் பிரிவு என்பவற்றுக்கும் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.