த.வெ.க கரூர் தெற்கு நகரப் பொருளாளர் கைது!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்றது.
இதில் ஏற்பட்ட நெரிசலில் சிறுவர்கள் உட்பட 41 பேர் பலியாகினர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார், த.வெ.க கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அதனடிப்படையில் நேற்று தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைதான நிலையில், மேலும் ஒரு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.