
கத்தரிக்கோல் காணாமல் போனதால் 35 விமானங்கள் இரத்து
ஜப்பான் ஷின்-சிடோசே விமான நிலையத்தில் உள்ள கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக 200 விமானச் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதுடன், ஏறக்குறைய 35 விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர் நேரப்படி கடந்த 17ஆம் திகதி காலை 9 மணிக்கு கத்திரிக்கோல் ஒன்று காணாமல் போயுள்ளது.
இதனைத் தொடர்ந்து பயணிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், காணாமல்போன கத்தரிக்கோல் நேற்று திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
