
தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் இனவாதங்களை விதைக்கிறார்கள்: எம்.கே.எம்.சப்றான்
-மூதூர் நிருபர்-
தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் இன்று இனவாதங்களை விதைக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மூதூரில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
திருடர்கள் இன்று ஊழல் செய்த வாகனங்களை வீதியில் நிறுத்திச் செல்கிறார்கள். இலங்கையர் என்று ஒன்றிணைய வேண்டும். இம்முறை திருகோணமலையில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி பெறும்.இம்முறை மக்கள் இனங்களாக பிரிந்து வாக்களிக்காமல் இலங்கையர் என்ற நோக்கோடு வாக்களிக்கவுள்ளனர்.
ஜனாதிபதி அவர்களை இன்று தோழர் என்று அழைக்கும் நிலை வந்துள்ளது. இதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள். இது தான் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்கவுள்ளமைக்கு காரணமென தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
