தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி வரலாற்றில் வைத்தியதுறைக்கு தெரிவாகிய முதல் மாணவி!

-மூதூர் நிருபர்-

தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியிலிருந்து முதற் தடவையாக, மாணவியொருவர் வைத்தியதுறைக்கு தெரிவாகியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை வெளியாகிய உயர்தரப் பரீட்டை பெறுபேற்றின் அடிப்படையில், விஞ்ஞானத்துறையில் தோற்றிய தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவி சுபைர் வஸீமா, 2A 1B பெறுபேற்றுடன், மாவட்ட மட்டத்தில் 10வது நிலையை பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகியுள்ளார்.

இந்த பாடசாலையில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பித்ததில், இந்த மாணவியே முதற்தடவையாக வைத்தியதுறைக்கு இம்முறை தெரிவாகியுள்ளமை, விசேட அம்சமாகும்.