தோப்பூர்-அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி சிரமதானம்

-மூதூர் நிருபர்-

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு தோப்பூர் பிரதேசத்திலுள்ள அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி இன்று புதன்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் இவ் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிளாஸ்டிக் பொருட்கள்,குப்பைகள் கரையோரப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.

தோப்பூர் உப அலுவலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களும் இவ் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோப்பூர்-அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி சிரமதானம்
தோப்பூர்-அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி சிரமதானம்

   

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்