தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த அணித்தலைவர் என்ற சாதனையை ரோஹித் சர்மா தன்வசப்படுத்தியுள்ளார்.

அயர்லாந்து அணிக்கெதிராக நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றதையடுத்து அவர் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முன்னதாக 41 வெற்றிகளைப் பெற்று மகேந்திரசிங் தோனி குறித்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா 42 வெற்றிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்