தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை தோட்டக் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை தவராசா (வயது – 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர் இவ்வாறு சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.