தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மஸ்கெலியா தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலையின் அருகில் உள்ள வடிகால் பகுதியில் ஆணின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தை உதவி வெளிக்கள உத்தியோகத்தர் செமுவேல் வின்சென்ட் (வயது – 52) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் அந்த பகுதியை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் நீதிமன்ற நீதிவான் வந்து பார்வை இட்ட பின்னர் உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது.

ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகள் பதிவு செய்ய உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்