தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரிட்டாஸ் செரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரிட்டாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், புதிய தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வு எகெட் கரிட்டாஸ் கேட்போர் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.டீ.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன், இதில் எகெட் கரிட்டாஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான கே.ரஜித், ஏ.எம்.பிரசாத், எம்.டினேஷ், ஆகியோர்கள் இணைந்து இச் செயலமர்வினை முன்னெடுத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்