தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகமாக (நிர்வாகம் மற்றும் நிதி) ஶ்ரீயானி அமுனுகம பதவியை பொறுப்பேற்றார்.
இவர் மாத்தளை பண்டாரகமவை பிறப்பிடமாக கொண்டவர், கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையின் பழைய மாணவியும் களனி பல்கலைக்கழகத்தின் வர்த்தகமானி விசேட பட்டதாரியும் ஆவார்.
1999 இல் இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவையில் (SLTES) இணைந்துகொண்ட இவர், இச்சேவையின் முதலாம் தர அதிகாரியாக (SLTES 1) கண்டி, தம்புள்ள, ஹசலக, மரதானை, இரத்தினபுரி, இரத்மலானை போன்ற இடங்களில் சேவை புரிந்த இவர், தொழில்நுட்பக்கல்லூரிகளின் அதிபராகவும் பணிப்பாளராகவும் கடமை புரிந்துள்ளார்.
திணைக்களத்தில் பல உயர்பதவிகளையும் வகித்துள்ளார். பரீட்சை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரதிப்பணிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார்.
இதேவேளை, தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் நிர்வாகப்ணிப்பாளராக மிகிராணி பாலசூரிய பதவியை பொறுப்பேற்றார்.
கேகாலை மாவனல்லயை சேர்ந்த இவர், சென் ஜோசப் பாளிகா பாடசாலையின் பழைய மாணவியும், களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியும் ஆவார்.
2013 இல் இலங்கை நிர்வாக சேவை (SLAS) இல் இணைந்துகொண்ட இவர், உயிரியல் விஞ்ஞானபட்டதாரியாவார்
தொழில்திணைக்களத்தில் உதவி ஆணையாளர், பிரதி ஆணையாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார் .


