
தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் கீழ் புதிய பாடநெறியை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
-நிருபர் நிதர்சன்-
தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் கீழ் உள்ள தொழில் நுட்பக்கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரிகளில் புதிய பாடநெறியை ஆரம்பிப்பதற்கான இந்திய கம்பனியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கட்டிடக்கலையினூடாக அலுமினியம் வடிவமைப்பும் பொருத்துதலும் Architecture &Aluminium Fabrication பாடநெறியே ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் ஊடாக பாடநெறியை ஆரப்பித்தல் ,விரிவுபடுத்தல், உபகரணங்கள் இயந்திரங்கள் வழங்கல் ,பயிற்சியாளர்களை ஊக்குவித்தல்,விசேட உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சி வழங்கல், ஓ.ஜே.ரீ வேலைத்தள பயிற்சி போன்றன முன்னெடுக்கப்படும்.
முதற்தடவையாக மருதானை தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரியில் இச்செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பணிப்பாளர் நாயகம் எஸ்.சீ.ஜகத் ,உதவி பணிப்பாளர் நாயகம்(கல்வி நடவடிக்கை) பரமேஸ்வரன் ,பணிப்பாளர் (நிர்வாகம்) இரங்க தயாரெத்தின, வீவா கம்பனி உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





