
தொழிலுக்கு சென்ற கணவனை காணவில்லை : கண்டுபிடித்து தருமாறு மனைவி கோரிக்கை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்திலிருந்து தொழிலிற்காக நாட்டின் தென்பகுதிக்கு சென்றவர் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி கம்பகா மாவட்டத்தில் தங்கி நின்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற யாழ்ப்பாணம் வத்திராயன் வடக்கை சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் (38 வயது) நபரே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி கம்பகாவிற்கு சென்ற கணேசலிங்கம் தினேஸ் தான் அங்கு சென்று சேர்ந்துள்ளேன் என்றும் அங்கு தொடர்ந்தும் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை தனது குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அதன்பிறகு இன்று வரை அவருடைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவரது மனைவி தனது கணவரை கண்டுபிடித்து தர ஆவண செய்துதவுமாறு கேட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் யாரேனும் அறிந்தால் கீழுள்ள இலக்கங்களுக்கு அழைத்து அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுகின்றது.
மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 077 363 3578
காணாமல் போனவரின் மனைவி 077 046 5770


