
தொலைபேசி வெடித்ததில் 4 பிள்ளைகள் தீயில் கருகி உயிரிழப்பு
இந்தியாவில் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு மொபைல் தொலைபேசி வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன் தாய், தந்தை காயமடைந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லவபுரம் பகுதியை சேர்ந்த சரிகா (வயது – 10), நிகரிகா
(வயது – 8), சன்ஸ்கர் (வயது – 6), களு (வயது – 4) ஆகிய 4 குழந்தைகளும் தாய் பபிதாவும் இதன் போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜானி என்ற கூலித்தொழிலாளி தனது தொலைபேசியை சார்ஜ் செய்தபோதே குறித்த தொலைபேசி வெடித்துள்ளது.
குறித்த தீ பரவலினால், படுகாயமடைந்த மனைவி உட்பட குழந்தைகள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தைகள் நால்வரும் உயிரிழந்துள்ளதோடு மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கணவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
