Last updated on April 11th, 2023 at 07:58 pm

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன : பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன : பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன : பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

நாட்டில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்திகளை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

வட்ஸ்அப் (Whatsapp)  மற்றும் பேஸ்புக் (Facebook) அழைப்புகளை கண்காணிக்கும் பணி இடம்பெறுவதாகவும், அத்துடன் அனைத்து தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாகவும்,  சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சு, இதுபோன்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதோ, தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைப்பதோ அல்லது வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிப்பதோ இல்லை எனவும், இந்த செய்திகள் வெறும் வதந்திகள் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்