
தொலைபேசிக் கம்பத்தில் இருந்து 2 துப்பாக்கிகள் மீட்பு!
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில், வாழைச்சேனைப் பகுதியில் உள்ள தொலைபேசிக் கம்பம் ஒன்றில் இருந்து 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மைக்ரோ கைத்துப்பாக்கியொன்றும், வெளிநாட்டுத் தயாரிப்பு ரிவால்வர் ஒன்றுமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், இந்த ஆயுதங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
