
தொப்புள்கொடியை வெட்டும் போது நேர்ந்த விபரீதம்
சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில், பிரசவத்தின் போது மகபேறின் போது உதவும் குடும்ப நல உத்தியோகத்தரின் கவனக்குறைவால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தை சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தது.
குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய போது, தவறுதலாக குழந்தையின் இடது கை விரலையும் வெட்டியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திய வெளியிட்டுள்ளன.
குழந்தை பிறந்து இரண்டு மணிநேரத்தின் பின்னரே, குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விடயத்தை மருத்துவமனை நிர்வாகம் தந்தையிடம் தெரிவித்துள்ளது.
தொப்புள்கொடியை வெட்டும் போது குழந்தை திடீரென கையை அசைத்ததால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் இணைப்பதற்காக, குறித்த குழந்தை சுமார் 300 மைல் தொலைவிலுள்ள வேறொரு விசேட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்திற்காகப் பெற்றோரிடம் மன்னிப்புக் கோரியுள்ள ருத்துவமனை நிர்வாகம், இழப்பீடு வழங்கவும் சம்மதித்துள்ளது.
அதேவேளை, கவனக்குறைவாகச் செயற்பட்ட மருத்துவ உதவி பெண்ணின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
