
தொண்டையில் நாணயம் சிக்கி 2 மாத குழந்தை உயிரிழப்பு
தொம்பே அஹுகம்மன பகுதியில் 2 வயது சகோதரனுடன் நேற்று திங்கட்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தொண்டையில் நாணயம் சிக்கி இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.
சகோதரன் விளையாடிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் வாயில் நாணயத்தை செருகியதால் அது தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாணயம் சிக்கியிருந்த சிசுவை தொம்பே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் சிசு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிசுவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ரமேஷ் அழகியவண்ண மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக தடயவியல் நிபுணர் மருத்துவ அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த சிசுவின் தாயும் மற்றைய குழந்தையும் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
