தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் உயிரிழப்பு!

-பதுளை நிருபர்-

நாவலப்பிட்டி – மொண்டிகிறிஸ்டோ தோட்டத்தில் தொட்டிலுக்காக பயன்படுத்தப்பட்ட சேலை கழுத்து பகுதியில் இறுகியதில் 9 வயதான சிறுவனொருவர் பலியானார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலுள்ள மற்றொரு குழந்தைக்கு கட்டப்பட்டிருந்த தொட்டிலில்  ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது  குறித்த சிறுவனின் கழுத்து இறுகியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.