
தொடர் மழையால் 5,600 வீடுகள் சேதம் : 282 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த ஐந்து வாரங்களாக பெய்த பருவமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 282 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மழை தொடர்வதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகள் நிரம்பியுள்ளன.
நெடுஞ்சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 5,600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.