
தொடர் தோல்வியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இன்று சனிக்கிழமை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது சிஎஸ்கே. இதற்கு முன்னதாக பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுடன் தோல்வியை தழுவி இருந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் KL Rahul 77 ஓட்டங்களையும், Abishek Porel 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் Khaleel Ahmed 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை தழுவியது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Vijay Shankar ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும், MS Dhoni 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி ஐபிஎல் தொடரின் புள்ளப்பட்டியலில் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ள டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.
அத்துடன் ஒரு போட்டியில் வெற்றிப்பெற்று தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 08ஆவது இடத்தில் உள்ளது.