தொடர்மழையால் இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறப்பு

வவுனியாவில் பெய்துவரும் அடைமழை காரணமாக தற்போது வரை 100 மில்லி  லீற்றர் மழை பதிவாகியுள்ளது.

அனைத்து குளங்களும் நிரம்பியுள்ள நிலையில் வவுனிக்குளம் வான் பாய்கிறது.

வவுனியாவில் இருந்து நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில்,  இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் 2 அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.