தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ள சீனா

பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

சீனா இதுவரை 53 தங்கம், 40 வெள்ளி மற்றும் 22 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 115 பதக்கங்களைப் பெற்று முதலிடத்திலும் பிரித்தானியா 30 தங்கம்m 18 வெள்ளி மற்றும் 13 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 61 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இதேவேளை அமெரிக்காm 20 தங்கம்m 22 வெள்ளிm 11 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 53 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதுவரையில் ஒரு வெள்ளிப்பதக்கத்தை மாத்திரம் வென்றுள்ள இலங்கை இந்த பட்டியலில் 60ஆவது இடத்தில் உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்