தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி
தம்புள்ளையில் இடம்பெற்ற சுற்றுலா இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது.
அதனைத்தொடர்ந்து, 139 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, 17 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.
எனினும், 3 போட்டிகளை கொண்ட இந்த இருபதுக்கு 20 போட்டி தொடரில், 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி 2 -1 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது.