தொடரும் குரங்கின் அட்டகாசம் : மீண்டும் ஒருவர் மீது தாக்குதல்!

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் அரபா நகரில் பள்ளிவாயலில் கடமை புரியும் நபர் நேற்று வெள்ளிக்கிழமை குரங்கு தாக்குதலுக்கு உள்ளானார்.

பள்ளியில் தூங்கி கொண்டிருந்த போது குறித்த நபரை குரங்கு கடித்து குதறியுள்ளது.

குறித்த நபர் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பள்ளி நிருவாக சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இதே குரங்கு அப்பகுதியை 12 வயது சேர்ந்த சிறுவன் ஒருவரை கடித்து தாக்கியுள்ளது.

இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான தொடர் தாக்குதல் காரணமாக, அப்பகுதிக்கு சென்று மதக் கடமைகளை நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும், நடமாட முடியாதுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.