
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த தென்னிலங்கைவாசிகள்
-யாழ் நிருபர்-
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று சனிக்கிழமை தென் இலங்கையில் இருந்து சகோதர மொழி பேசும் ஒரு குழுவினர் குறித்த பகுதிக்கு வந்து, திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் குழுவினருடன் இணைந்தனர்.
இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டக் களத்திற்கு வருகை தந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சில முற்போக்கு வாதிகளுக்கு, சட்டவிரோத விகாரை தொடர்பான ஆக்கிரமிப்புக்களை சட்டத்தரணி காண்டீபன் விளங்கப்படுத்தினார்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

