தே.ம.ச போன்ற மூன்றாம்தர அரசியல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைக்கான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொத்துவில் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே குறித்த மன்றங்களுக்கு நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதி நியமிக்கப்படுகின்றார்.

அவ்வாறு இல்லாது தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரம் சேவையாற்றுவதற்காக நியமிக்கப்படவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறான மூன்றாம்தர அரசியல் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்ச வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க