
தேவாலய சிலுவையை உடைத்த இளைஞர் கைது
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர் மது போதையில் இருந்த நிலையிலேயே இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
