தேர்த் திருவிழாவில் 70 பவுண் நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் முறைப்பாடு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்று தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இன்று சனிக்கிழமை தீர்த்த  திருவிழா என்பதனால் அதிகளவான அடியவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அடியவர்கள் தமது நகைகள் மற்றும் பணத்தில் அவதானம் தேவை என்று பொலிஸார்  கேட்டுள்ளனர்.