தேர்த் திருவிழாவில் பூசாரி தீ விபத்தில் சிக்கி பலி
அகலவத்தை முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரியான ஆசிர்வாதன் சுந்தர்குமரன் (வயது- 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
