தேர்தல் முடிவுகளில் மோசடி : மக்கள் பாரிய போராட்டம்!

வெனிசுவெலாவில், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அந்த நாட்டு மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெனிசுவெலாவில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றதையடுத்து நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் தேர்தல் முடிவுகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து, வெனிசுவெலாவின் எதிர்க்கட்சியினரும், மக்களும் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்