தேர்தல் பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

தேர்தல் பிரசார செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில், மூன்று பேர் மட்டுமே தங்கள் செலவு அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரதன தேரர், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன ஆகியோர் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பித்திருக்கவில்லை.

எவ்வாறாயினும், பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன ஆகியோர் தமது செலவு அறிக்கைகளை அஞ்சல் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொதுத் தேர்தல் செலவுகள் தொடர்பாக அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையே இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வரம்பு குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்