தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரச பணியாளர் உயிரிழப்பு

கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்து உத்தியோகத்தர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கலகெதர மினிகமுவ பகுதியைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரி தசநாயக்க (வயது – 33) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

குறித்த அதிகாரி திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிகிச்சைக்காக நேற்று மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க