தேர்தல் தொடர்பில் 925 முறைப்பாடுகள்

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 89 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்