தேர்தல் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்
தேர்தல் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பு ஒன்றிற்கு அனுமதி கோரி தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தது.
இதனடிப்படையில், இந்த விவாதம் குறித்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தேர்தல் தொடர்பான இறுதி முடிவை எட்டும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி நிறுவனங்களை செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பிரதமர் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் கூடியது.
குறித்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்களும் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டை நிர்வகிப்பது இந்தக் குழுவின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கண்காணித்து முன்பை போன்று மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த நிறுவனங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்