
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு திருத்தம் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
