
தேர்தல் சட்டங்களை மீறிய 30 வேட்பாளர்கள் கைது
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் சட்டங்களை மீறிய 30 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான 85 குற்றவியல் புகார்களும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 313 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது பறிமுதல் செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 31 என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்