தேர்தல் காலங்களில் மேலதிக பேருந்துகள் சேவையில்

கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு பிராந்தியங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொது தேர்தலை முன்னிட்டு இன்று தொடக்கம் திங்கட்கிழமை வரையில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இவ்வாறு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் 80 பேருந்துள் நாளை கொழும்பு கோட்டை பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் பணிகளுக்காக போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்காக 1,017 பேருந்துகளும் தேர்தல் பணிகளுக்காக 290 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுள்ளது.