தேர்தல் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டுக்கு சென்ற பதில் அரசாங்க அதிபர்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தேர்தல் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டுக்கு சென்று அவர்களது துக்கத்தில் பங்கெடுத்தார்.

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்கின்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்த நிலையில், உயிரிழக்கும் போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.

கடந்த பொதுத் தேர்தல் தினத்தன்று யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தேர்தல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை திடீரென உயிரிழந்தர்.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் குறித்த உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கெடுத்தார்.