தேர்தல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டம் தொடர்பிலான செயலமர்வு!

-மட்டக்களப்பு நிருபர்-

தேர்தல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் அமைப்புகளின் மாவட்ட மட்டப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான, தேர்தல் விதிமுறைகள் தொடர்பிலான மீளாய்வு செயலமர்வு நேற்று புதன்கிழமை   மட்டக்களப்பு தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இம் மீளாய்வு செயலமர்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியனால் தேர்தல் அறிமுகம், தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம், தேர்தல் சட்டங்கள் மற்றும் எல்லை நிர்ணய சட்டங்கள் தொடர்பிலான விளக்கவுரைகள் இடம்பெற்றன.

இதில் தேர்தல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.